சர்வதேச அளவில் இதுவரை 4 மில்லியன் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனை கொண்டாடும் விதமாக 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் அடிப்படையில் ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்போர்ட்டியான இருக்கை, சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட சக்கரங்கள், புளூடூத் இணைப்பு வசதி, எல்இடி ஹெட்லைட் உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்பெஷலான டிவிஎஸ் ஆர்டிஆர் 160 4வி பைக்கின் சிறப்பம்சங்களை விளக்கும் வகையில் இந்த வீடியோவை வழங்கி இருக்கிறோம்.